நேரம்: தாகம் எடுக்கும்போதெல்லாம்.
நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.
தேவையான பொருட்கள்: குப்பைமேனி இலைகள் – 7, மிளகு – 4, சீரகம் – 1 சிட்டிகை, குடிநீர் – 3 லிட்டர்.
செய்முறை: தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த தண்ணீரை இறக்கி வைத்து, அதில் குப்பைமேனி இலைகள், மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும்.
தண்ணீர் ஆறியதும், அவ்வப்போது தாகம் எடுக்கும்போது தேவைக்கேற்ப பருக வேண்டும்.
குறிப்பு: குப்பைமேனி இலைகளை நன்கு அலசிய பிறகே, வெந்நீரில் போட வேண்டும்.