நேரம்: தாகம் எடுக்கும்போதெல்லம்.
நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.
தேவையான பொருட்கள்: மிளகு – 3 எண்ணிக்கை, சோம்பு – 4 சிட்டிகை, சுத்தமான குடிநீர் – 3 லிட்டர்.
செய்முறை: தயாராக வைத்துள்ள குடிநீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும். அதில் சோம்பு, மிளகு ஆகியவற்றைப் போட்டு மூடி வைத்து விட வேண்டும். தண்ணீர் ஓரளவிற்கு ஆறியவுடன், வெதுவெதுப்பான பதத்தில் பருக வேண்டும்.