நேரம்: இரவு உறங்கச் செல்லும் முன்.
நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.
தேவையான பொருட்கள்: பிஞ்சு பிரண்டைக் கொடி – 1 அடி நீளம், தண்ணீர் – அரை குவளை, புளிக்கரைசல் – அரை குவளை, மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி.
செய்முறை: பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் ஊற்றி, மிக்சியில் அரைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
இந்த பிரண்டைச் சாறுடன், புளிக்கரைசல், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
லேசாக கிளறினால், பசைபோல வர வேண்டும். அத்தகைய பக்குவத்தில் இறக்கி, வெதுவெதுப்பான சூட்டில், தொந்தரவு இருக்கும் உடல் பாகத்தில் தடவ வேண்டும்.
பிரண்டைத்தைலம் மூட்டு வலிக்கானதா… நாள் கணக்கு உள்ளதா..அல்லது வலிக்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாமா…