நேரம்: மாலை 6 மணி அளவில்.
நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.
தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை – 2 குவளை, சின்ன வெங்காயம் – 4 (நறுக்கியது), தக்காளி – 1 (நறுக்கியது), சோம்பு – 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி, தேங்காய்ப் பால் – அரை குவளை, தண்ணீர் அல்லது அரிசி கழுவிய தண்ணீர் – 3 குவளை, உப்பு – தேவைக்கேற்ப. கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி.
செய்முறை: சட்டியில் எண்ணெய் ஊற்றி, சூடு வந்தவுடன் சோம்பு தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
கீரையை சேர்த்து, வதக்கி தண்ணீர் ஊற்றவும்.
உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
கீரை வெந்தவுடன், தேங்காய்ப் பால் சேர்த்து லேசாக கொதிக்கவிட்டு இறக்க, ஆற வைத்து பருக வேண்டும்.