நேரம்: மாலை 6 மணி அளவில்.
நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், 7 நாட்கள்.
தேவையான பொருட்கள்: அகத்திக் கீரை – 2 குவளை, தேங்காய்ப் பால் – அரை குவளை, தண்ணீர் அல்லது அரிசி கழுவிய தண்ணீர் – 3 குவளை, நெய் – அரை தேக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க: கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, பூண்டு – 6 பல் தட்டியது, சின்ன வெங்காயம் – 10, பெருங்காயம் – 1 சிட்டிகை.
செய்முறை: தண்டு நீக்கிய அகத்திக்கீரை இலைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் அல்லது அரிசி கழுவிய தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் அகத்திக்கீரை இலைகளை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
கீரை வேகும் போதே தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, சீரகம், சின்ன வெங்காயம், பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதை கீரையுடன் சேர்க்கவும்.
கீரை நன்கு வெந்தவுடன் தேங்காய்ப் பாலை சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கி, ஆற வைத்து பருக வேண்டும்.
குறிப்பு: தேங்காய்ப் பால் சேர்க்க விரும்பாதவர்கள் கொஞ்சம் தேங்காய் துருவலை இறுதியாக சேர்த்தும் இறக்கலாம்.