பாதாம் பால்

நேரம்: இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து.

நாட்கள்: குறைந்தபட்சம் 14 நாட்கள், அதிகபட்சம் 30 நாட்கள்.

தேவையான பொருட்கள்: பாதாம் – 100 கிராம், முந்திரி – 100 கிராம், பனங்கல்கண்டு – 100 கிராம், ஏலக்காய் – 5 கிராம்.

செய்முறை: பாதாம், முந்திரி ஆகியவற்றை தனித்தனியாக லேசாக வறுத்து, சூடுபடுத்த வேண்டும்.

பாதாம், பனங்கல்கண்டு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அறைத்துக் கொள்ள வேண்டும்.

அறைத்த கலவையுடன், முந்திரியை மிக்சியில் சேர்த்து லேசாக அறைத்துக் கொள்ள வேண்டும்.

இதுவே பாதாம் தூள். இதை ஒரு காற்று புகாத பாத்திரத்தில் கொட்டி மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

அன்றாட தயாரிப்பு முறை: பால் – 1 குவளையை காய்ச்சி, இறக்கி, அதில் பாதாம் தூள் 1 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப சேர்த்து, ஆற்றி பருகவும்.

குறிப்பு: முந்திரியை மிக்சியில் போட்டு நிறுத்தி நிறுத்தி அறைக்க வேண்டும். அதிகமாக அறைக்கக்கூடாது.

வண்ணம் தேவைப்படுவோர், கொஞ்சமாக மஞ்சள் தூள் கலந்து வைத்துக் கொள்ளலாம்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு