FAQs

அதிகம் கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்:

கே: நீங்கள் பார்ப்பது என்ன மாதிரியான மருத்துவம்?

ப: மரபு மருத்துவம்; இயற்கை மருத்துவம்; வாழ்வியல் மருத்துவம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். எப்படிச் சொன்னாலும், ஒன்றுதான்.

கே: சித்த மருத்துவமா? ஆயுர்வேதமா? எதன் அடிப்படையில் மருத்துவம் பார்க்கிறீர்கள்?

ப: உணவு மருத்துவம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம், சித்தம் போன்ற பலவிதமான மரபு வழிப்பட்ட மருத்துவ அறிவை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முறை இது. யாருக்கு எது தேவையோ, அதனடிப்படையில் மருந்துகள் பரிந்துரை செய்யப்படும்.

கே: இம்முறையில் எப்படி நோயின் தீவிரத்தை அறிந்துகொள்கிறீர்கள்?

ப: கேட்டறிதல், பார்த்தறிதல், தொட்டறிதல் மற்றும் நாடி பார்த்தல் ஆகியவற்றின் மூலம் தொந்தரவுகளின் தன்மையையும், தீவிரத்தையும் தெரிந்துகொள்கிறேன்.

கே: எல்லோருக்கும் கண்டிப்பாக நாடி பார்க்க வேண்டுமா?

ப: பெரும்பாலும் நாடி பார்க்க வேண்டும். ஒரு சிலருக்கு தேவைப்படாது.

கே: நீங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை கடையில் வாங்கிக் கொள்ள வேண்டுமா? அல்லது நீங்களே செய்து கொடுப்பீர்களா?

ப: இரண்டும் இல்லை. மருந்துகளுக்கான செய்முறைக் குறிப்புகளைக் கொடுத்துவிடுவோம். நலவிழைவோர் (நோயுற்றவர்) அல்லது அவரை கவனித்துக் கொள்வோர் வீட்டில் செய்துகொள்ள வேண்டும்.

கே: மருந்து செய்முறைக்கான மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்கக் கூடியவையாக இருக்குமா?

ப: மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி போன்ற சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே பெரும்பாலும் மருந்துகளை செய்துகொள்ள முடியும். ஒரு சில பொருட்களை மட்டும், நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும். உதாரணமாக: சுக்கு, சித்தரத்தை, திப்பிலி போன்றவை.

ஒரு சில இடங்களில் (குறிப்பாக, வெளிநாடுகளில்) சில பொருட்கள் நிச்சயமாக கிடைக்காது. அத்தகைய சூழலில் குறிப்பிட்ட மருந்துகளைத் தவிர்த்துவிட்டு, அந்த ஊரில் என்ன கிடைக்குமோ அதனையே மருந்தாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படும்.

கே: எந்த நோயாக இருந்தாலும் சரியாகி விடுமா?

ப: எல்லா தொந்தரவுகளும் சரியாகும். ஆனால், எல்லோருக்கும் சரியாகும் என்று சொல்ல முடியாது.

கே: ஒரு நோய் எவ்வளவு நாட்களில் குணமாகும் என்று உறுதி கொடுப்பீர்களா?

ப: நான் யாருக்கும் உறுதி கொடுப்பதில்லை. Assurance can only given by God or Fraud.


Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு