நேரம்: அதிகாலை நேரம்.
நாட்கள்: குறைந்தபட்சம் 24 நாட்கள், அதிகபட்சம் 48 நாட்கள்.
செய்முறை: அதிகாலை நேரத்தில் இளவெயில் முகத்தில் படுமாறு நின்று கொள்ளவும். கண் விழிகளை மேலிருந்து கீழாகவும், பின் கீழிறிந்து மேலாகவும் நகர்த்த வேண்டும். இப்படியாக 3 முறை செய்ய வேண்டும்.
பிறகு, கண் விழிகளை வலதுப் பக்கத்திலிருந்து இடது பக்கமாகவும், பின் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாகவும் நகர்த்த வேண்டும். இப்படியாக 3 முறை செய்ய வேண்டும்.
அதன்பிறகு, கடிகார சுழற்சி முறையில் 180 டிகிரியில் விழிகளை சுழற்றவும். பின்னர் கடிகார சுழற்சிக்கு எதிர் திசையில் 180 டிகிரியில் சுழற்றவும். இப்படியாக 3 முறை செய்ய வேண்டும்.