கற்பூரத் தைலம்

நேரம்: இரவு உறங்கச் செல்லும் முன்.

நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.

தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Table Spoon), பச்சைக் கற்பூரம் அல்லது சூடம் – 1 சிறிய கட்டி.

செய்முறை: தேங்காய் எண்ணெயை ஒரு கரண்டியில் ஊற்றி அடுப்பில் காட்டி சூடுபடுத்தவும். எண்ணெய் நன்கு கொதித்த பிறகு, இறக்கி பச்சைக் கற்பூரம் அல்லது சூடத்தை அதில் போடவும்.

கற்பூரம் / சூடம் முற்றிலும் கரைந்த பிறகு, வெதுவெதுப்பான பதத்தில் இருக்கும்போது நெஞ்சிலும் முதுகிலும் நன்கு, சூடுபறக்க தேய்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பச்சைக் கற்பூரம், சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய் ஆகியவை சிறந்தவை.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு