நேரம்: காலை வெறும் வயிற்றில்
நாட்கள்: 14 நாட்கள்
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை – 6 கொத்துகள், பனைவெல்லம் – 1 கரண்டி. தேன் – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – சிறிதளவு.
செய்முறை: கருவேப்பிலை இலைகளுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, அரைத்துக் கொள்ளவும். அதில் பனைவெல்லம், தேன், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை கலந்து பருகவும்.
தேன், எலுமிச்சைச்சாறு, பனைவெல்லம் ஆகியவற்றை சுவைக்கேற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ சேர்த்துக் கொள்ளலாம்.
(வெறும் வயிறு என்றால், குளம்பி (காஃபி), தேநீர் (டீ), தண்ணீர் எதுவும் அருந்தாமல், மலம் கழித்த பிறகு என்று பொருள்.)