நேரம்: காலை வெறும் வயிற்றில்
நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.
தேவையான பொருள்: சோற்றுக்கற்றாழை – உள்ளங்கை அளவிற்கு.
செய்முறை: சோற்றுக்கற்றாழையை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, ஒரு முறை தண்ணீரில் கழுவ வேண்டும். கழுவிய பின்பு அதனை அப்படியே வாயில் போட்டு சாப்பிடலாம். அல்லது மிக்சியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, அரைத்து பருகலாம்.
கற்றாழையை ஏழு முறை கழுவ வேண்டும், ஒன்பது முறை கழுவ வேண்டும் என்று சொல்லப்படுவதெல்லாம், மூட நம்பிக்கை. ஒரு முறை கழுவினாலே போதுமானது.
(வெறும் வயிறு என்றால், குளம்பி (காஃபி), தேநீர் (டீ), தண்ணீர் எதுவும் அருந்தாமல், மலம் கழித்த பிறகு என்று பொருள்.)