அனுபமாராணி, கொலம்பஸ், USA

சிதம்பரம் ஆற்றுப்படை நிகழ்வில்தான் கலாநிதி அவர்களை பார்த்தேன். ஒப்படைப்பு என்பதற்கு அவர் தந்த எளிய விளக்கமும், அவர் தரையில் கால் மடித்து அமர்ந்து இருந்தவிதம், மென்மையாக பேசியது, கேள்வியை உள்வாங்கி அதற்க்கு பதில் அளித்தவிதம் என்று அனைத்துமே எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. அதன் பிறகு தோழி ஜெயபாரதி மூலம் ஈரோடில் நடந்த யாவரும் நலம் வகுப்பில் கலந்து கொண்டு அவரின் மரபு மருத்துவ குடும்பத்தில் இணைந்தது என் புதிய பயணத்தின் தொடக்கம். அதன் பிறகு தேவை படும் போது திருச்செங்கோடு நாமக்கல் சென்று அவரிடம் மருத்துவம் பார்த்து கொண்டேன்.

எனக்கு அடிக்கடி படபடப்பு வருவதும். அதன் பிறகு உடலும் மனமும் சோர்ந்து போய் விடுவதும்தான் என் பிரச்சனை. மருத்துவம் பார்க்க தொடங்கிய சில வாரங்களிலேயே என் உடலில் தொல்லைகள் ஒன்றும் இல்லை என்றும் என் மனதின் செயல்பாடுதான் என் நிலைக்கு காரணம் என்றும் தெளிவாக சொல்லிவிட்டார். அயலகம் செல்ல விருப்பம் இல்லாமை… ஊர் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் அதை எப்படி செய்வது என்பதில் எனக்குள் இருந்த குழப்பம்… இந்த நிலையில் ஒரு குடும்ப பொறுப்புகளை எப்படி கையாள்வது என்ற பயம் என்று எல்லாம் சேர்ந்து என் நிலையை கவலைக்கிடம் ஆகியது… என்னால் சுய முயற்சியில் இதில் இருந்து வெளியே வர இயலவில்லை.

கலாநிதி அவர்களை மருத்துவராக பெற்றுஇல்லாவிட்டால் நான் இன்று மன நோய்க்கான ஆங்கில மருந்துகளை உட்கொண்டு என் மீதி வாழ்க்கையை எப்போது வாழ்ந்து முடிப்போம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பேன்.

இந்தியாவிலும், அமெரிக்கா வந்த பிறகும் கால நேரம் பார்க்காமல் என் அலைபேசி அழைப்புக்கு whatsapp message க்கு என்று கடந்த 10 மாதங்களாக அவரின் வழியில் மிக மிக எளிய மருத்துவ முறைகளால் என்னை இன்று கரை சேர்த்து உள்ளார்.

அமெரிக்காவில் உடல்/மனம் நன்றாக உள்ளவரைதான் வாழ்க்கை இனிமையாக உள்ளது போல தோன்றும்… எனக்கு படபடப்பு வருவது என்பது ஒரு மரண அனுபவம் போலத்தான் இருந்தது…. அதை கொஞ்சம் கொஞ்சமாக பயம் இன்றி எதிர் கொண்டு மூல காரணத்திற்கு மருத்துவம் சொல்லி அதுவும் அலைபேசியில் என்பது சாதாரண விஷயம் இல்லை.

இந்த பயணத்தின் மூலம் கலாநிதி அவர்கள் என் வாழ்க்கையை பல பரிணாமத்தில் மாற்றி அமைத்து கொடுத்துள்ளார். அதை இனி தொடர்ந்து செயல்படுத்தி நலனை தக்கவைத்து கொள்வது என் கடமை….

அவருக்கு கோடான கோடி நன்றிகள்.

– அனுபமாராணி, ஈரோடு / கொலம்பஸ், USA

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு