ரேவதி பிரபுராம், சேலம்

எனக்கு திரு. கலாநிதி அவர்களை 4 ஆண்டுகளாக தெரியும். ஆரம்பத்தில் ஆங்கில மருத்துவ முறையில் இருந்து விடுபட மிகவும் சிரமமாக இருந்தது. வீட்டு மருத்துவமும் கடினமாகத் தோன்றியது. இதனால் இந்த இரண்டு மருத்துவ முறைகளுக்கும் இடையே தாவிக் கொண்டே இருந்தேன். அடுத்த ஒரு வருடம் எனக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

என் மருத்துவ தேடல், ஆன்மிக தேடல் என்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றது. அது எனக்கு பொறுமையும், நம்பிக்கையுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என்பதை புரிய வைத்தது. பக்குவப்பட்ட என் மனம் திரு. கலாநிதி அவர்களையே மீண்டும் நாடியது. இதற்குள் இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றது. அவரை மீண்டும் சென்று பார்த்தபோது அவருடைய எளிமையும், நிதானமும் சிறிதும் மாறவில்லை. இது அவர் மீதான என் மரியாதையைக் கூட்டியது.

இந்நிலையில் மரபு மருத்துவம் எனக்கு புரிய தொடங்கியது. கை மேல் பலன் கிடைத்தது. எனக்கு மூன்று மகள்கள். மூன்றாவது மகளுக்கு ஒரு வயது இருக்கும். கண்கள் பொங்கி பீழை கட்டியது. திரு. கலாநிதி ஈரத்துணியால் துடைக்க சொன்னார். 5 நாட்களுக்கு இப்படியே இருந்தது. பிறகு படி படியாக குறைந்தது. அவள் உடலில் குறனை குறனையாக வந்தது. வேப்பிலை மற்றும் குப்பைமேனி இலையை தண்ணீரில் போட்டு வைத்து அந்நீரில் குளிப்பாட்டச் சொன்னார். ஐந்து நாட்களில் சரியானது.

ஒருமுறை தொடர்ந்து மூன்று பிள்ளைகளுக்கும் மாறி, மாறி காய்ச்சல் என ஐந்து நாட்களுக்கு இருந்ததால் என் மனம் மிக சோர்வுற்றது. என் நம்பிக்கையை இறைவன் சோதித்தானோ என்னவோ?

திரு. கலாநிதியிடம் தொடர்பிலேயே இருந்தேன். படபடப்பான மனதிற்கு அவருடைய அமைதியான பதில் மாமருந்து. தானே சரியாகிவிடும் என்று விட முடியாது. மரபு மருத்துவம் கடைபிடிக்கும் தாய்மார்களுக்கு பொறுப்புகள் அதிகம். ஈர துணி வைத்தியம், கஞ்சி உணவு, பிரார்த்தனை போன்றவை அவர்களை குணப்படுத்தியது.

காய்ச்சலை அனுமதித்தால் பிள்ளைகள் சரியாகி வரும்போது புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். நல்ல பசியெடுக்கும்.

எனக்கு மாதவிடாய் தொந்தரவு இருந்தது. அதை செம்பருத்திப் பூ, கருவேப்பிலைச் சாறு முதலிய எளிய மருந்துகளின் மூலமே சரி செய்தார்.

எனக்கு மனசோர்வு நிறைய உண்டு. அதை என் நாடி பிடித்தே கண்டுபிடித்துவிடுவார்.
அவருடைய சுருக்கமான பதிலில் பல அர்த்தங்கள் இருக்கும். அதை நாம் கடைபிடிக்கும்போதுதான் உணர முடியும்.

நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டில் மார்கழி பனியிலும் பச்சை தண்ணீரில் தான் குளிக்கிறோம். எங்கள் கடைகுட்டிக்கும் குளிர்ந்த நீரில் இருமுறை தலைக்கு தண்ணீர் ஊற்றுகிறோம்.

இயன்றவரை வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் குளியல், கற்றாழை குளியல் செய்கிறோம்.

மரபு மருத்துவம் மூலம் நான் உணர்ந்த சிலவற்றை கூறுகிறேன்.

  • பசி, தாகத்திற்காக காத்திருக்க வேண்டும்.
  • எளிமையான உணவே ஆரோக்கியத்திற்கான வழி.
  • நம் குறிக்கோளில் அறம் இருந்தால் அதை விரட்டி நாம் செல்ல வேண்டாம். அது இயல்பாக நிறைவேறும்.
  • மனமே அனைத்து நோய்களுக்கும் அடிப்படை.
  • பொறுப்பை இறைவனிடம் விட்டுவிட்டால் நம் வாழ்க்கை சீராகிவிடும்.

நன்றி.
ரேவதி பிரபுராம், சேலம்.

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு