வனிதா சரவணன், துறையூர்

திரு. கலாநிதி அவர்களை முதன்முறையாக சேலத்தில் மருத்துவ ஆலோசனைக்காக சந்தித்தேன். முன்பெல்லாம் என் மகனுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை அன்டிபயாடிக் கொடுத்துக் கொண்டிருப்போம். அப்போது தான் சளி, இருமல் சரியாகும். என் மகனுக்கு 8 வயதான போது அவரை பார்த்தேன். இப்போது அவனுக்கு 13 வயதாகிறது. 2 வயது முதல் 8 வயது வரை நிறைய மருந்துகள் அவனுக்கு கொடுத்து வந்தோம்.


எனக்கு மூட்டுகளில் சத்தம் இருந்தது. அம்மாவுக்கு இருந்த மூட்டு வலி எனக்கு இருக்குமோ என்ற பயம் காரணமாக அவரை பார்க்கச் சென்றேன். முதலில் நமக்கு பார்த்துவிட்டு, பிறகு குழந்தைகளுக்கு பார்க்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்துகொள்வோம் என நினைத்தேன்.


அவர் சொன்ன உணவுமுறைகளை ஒருமாதம் முழுமையாகப் பின்பற்றினேன். ஒரு மாதத்திலேயே மூட்டுகளில் ஏற்பட்ட சத்தம் நின்றுவிட்டது. கர்ப்பப் பையில் கழிவுகள் உள்ளது என்று கூறி, எனக்கு உணவு முறைகளைச் சொன்னார். அவர் சொல்லும் வரை எனக்கு கர்ப்பப்பையில் கழிவுகள் இருக்கும் என்பது தெரியாது.


மகனுக்கு சிகிச்சை பார்த்தபோது மருந்து, மாத்திரைகளை நிறுத்த சொன்னார். மருந்து, மாத்திரைகளை நிறுத்தியதும் அவனுக்கு காய்ச்சல் வந்தது. எப்போது தொந்தரவு வந்தாலும் அலைபேசியில் அழையுங்கள் என்று அவர் சொல்வார். நான் பல முறை அப்படி அலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்துள்ளேன். காய்ச்சல் வருவது உடலுக்கு நல்லது தான் என்று தெரிந்தபிறகு, அதுகுறித்த பயம் எனக்குப் போய்விட்டது. எத்தனை முறை அலைபேசியில் அழைத்தாலும் பொறுமையாக பதில் சொல்வார்.


என் மகனுக்கு கழுத்தில் கட்டி வந்தது. அப்போது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஒரு பொருளை வாங்கி தடவச் சொன்னார். அந்த மருந்தின் பெயர் இப்போது நினைவில் இல்லை. அதைத் தடவிய பிறகு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் வந்தால் கட்டி சரியாகிவிடும் என்று சொன்னார். பொறுமையாக நாங்களும் காத்திருந்தோம். மெல்ல கட்டி மறைந்து, காய்ச்சலும் விட்டது. ஆனால் காய்ச்சல் காலத்தில் அவருக்கு அலைபேசியில் அழைத்து பேசி கொண்டே இருந்தேன்.


பொதுவாக தொந்தரவு என அவரை அழைத்து பேசினாலே சரியாகிவிடும். முன்பெல்லாம் காய்ச்சலின் போது மிளகு கசாயம் சொல்வார். பிறகு தண்ணீர் மட்டும் குடியுங்கள் போதும் என்றார்.


பாப்பாவிற்கு இரண்டு வயது இருக்கும்போது அவரைப் பார்க்க ஆரம்பித்தேன். இப்போது வரை எந்த மருந்தும் கொடுப்பதில்லை. அவளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அறையை இருளாக்கி தூங்க வையுங்கள் என்பார். அப்படி செய்தால் அவள் 2, 3 நாட்கள் கூட தூங்கி கொண்டே இருப்பாள். காய்ச்சலும் இருந்து கொண்டே இருக்கும். அப்புறம் சரியாகிவிடும். குழந்தைக்கு என்ன தொந்தரவு என்று அவர் சொல்வார். அது சரியாக இருக்கும்.


எந்த நேரத்தில் எந்த சுவையை அவர்கள் விரும்பினாலும் கொடுங்கள் என்பார். இப்போது சீதாப்பழம் வேண்டும் என்று கேட்டால் கொடுங்கள் என்பார். இப்போது வரை பாப்பா பசித்தால் தான் உண்கிறது. மகனுக்கு தான் அவ்வப்போது ஏதேனும் தொந்தரவு வரும். பாப்பாவிற்கு எதுவும் வருவதில்லை. எனக்கு நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தது.


நான் ஆறாம் வகுப்பு படித்தது முதல் கண்ணாடி போட்டிருந்தேன். எனக்கு கிட்ட பார்வை இருந்தது. கண்ணாடியை கழட்டுங்கள் சரியாகிவிடும் என்று அவர் சொன்னார். கண்ணாடி போட்டிருந்தபோது ஏற்பட்ட தொந்தரவுகளை விட அதை அகற்றிய பிறகு குறைந்தது. கண்ணாடி போட்டிருந்த காலத்தில் கண்ணாடி இல்லாமல் டிவி பார்க்க முடியாது, புத்தகம் படிக்க முடியாது. ஆனால் இப்போது ஐந்து ஆண்டுகளாக கண்ணாடிக்கான தேவை எனக்கு எங்குமே இல்லை. கண்ணாடியை கழட்டியதுமே நல்ல வித்தியாசம் தெரிந்தது. தூரத்தில் உள்ள எழுத்துக்களை படிக்க முயற்சி செய்யுங்கள் என்று சொல்வார். அவர் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்ததால் கண்ணாடி கழட்டிவிட்டு சிரமமாக உணரவில்லை. தூரத்தில் உள்ளது சற்று மங்கலாக இருந்தாலும் இப்போது எனக்கு கவலை இல்லை.


குழந்தைகளுக்கு ஆளாளுக்கு ஒரு உணவுமுறை சொல்வார்கள். குழந்தையை நன்றாக வளர்ப்பதற்கு எதை பின்பற்றுவது என குழப்பம் இருந்தது. மருந்துகளில் நிறைய சத்து உள்ளது என நினைத்து நிறைய கால்சியம், இரும்பு மாத்திரைகள், ஹெல்த் சப்ளிமென்ட்களை எல்லாம் முன்பு வாங்கி வைத்திருப்பேன். எதை சாப்பிடுவது என்ற குழப்பம் இருக்கும். பழங்களில் மருந்து தெளிக்கப்பட்டுள்ளதால் சத்தில்லை, மாத்திரைகளில் தான் சத்துள்ளது என்று நினைப்பேன்.


இவரை பார்த்தபோது மனசு லேசானது. தூதுவளையில் நெய் வதக்கல் என எளிய மருந்துகளை சொல்லும்போது வியப்பாக இருக்கும். அதன் பிறகு முந்தைய மருந்து பழக்கங்கள் அனைத்தையும் கைவிட்டேன். நமக்கு ஒரு நல்ல மனிதரை கடவுள் அறிமுகம் செய்துள்ளார் என நினைத்தேன். எங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைப்பேன். மனம் சரியில்லாத போது அவருக்கு அழைத்து பேசுவேன். அவர் நாடி பிடித்தே என்னுடைய தொந்தரவுகளை கண்டுபிடித்து விடுவது கண்டு நான் அசந்துபோவேன். உளவியல் ரீதியாகவும் அவர் துல்லியமாக சொல்லிவிடுவார்.


– வனிதா சரவணன், துறையூர்.

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு