நேரம்: இரவு உணவு சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து.
நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.
தேவையான பொருட்கள்: மிளகு – 12 எண்ணிக்கை, சீரகம் – ஒரு தேக்கரண்டி (Tea Spoon), பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை – 1 கரண்டி, சுக்கு – சிறிதளவு, சித்தரத்தை – சிறிதளவு.
செய்முறை: மிளகு, சீரகத்தை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
சுக்கு, சித்தரத்தையை இடித்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், சுக்கு, சித்தரத்தை, பனைவெல்லம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் முக்கால் டம்ளர் அளவுக்கு சுண்டியவுடன் இறக்கி, ஆறவைத்து வடிகட்டி பருக வேண்டும்.