முடிச்சு கஞ்சி

mudichu kanji

நேரம்: நாள் முழுவதும் அவ்வப்போது.

நாட்கள்: குறைந்தபட்சம் 7 நாட்கள், அதிகபட்சம் 14 நாட்கள்.

தேவையான பொருட்கள்: பச்சரிசி, கருப்பு உளுந்து (உடைத்தது), சிறுபயறு, துவரம் பருப்பு, கடலை பருப்பு – இவை அனைத்தும் தலா 5 கிராம். மிளகு – 1 தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, பூண்டு – 2 பற்கள், இஞ்சி – சிறிதளவு, உப்பு – ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் – தேவைக்கேற்ப, தண்ணீர் – 1 லிட்டர், மண்சட்டி – 1, கைக்குட்டை அளவிலான பருத்தித் துணி – 1, கனமான நூல் – 1 சாண்.

செய்முறை: அனைத்து தானியங்களையும் தனித்தனியாக வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பருத்தித் துணியில் வறுத்த தானியங்கள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, உப்பு, பெருங்காயம் ஆகிய அனைத்தையும் போட்டு, துணியை முடிச்சாக சுற்றி, நூல் கொண்டு கட்டிவிட வேண்டும்.

மண் சட்டியில் தண்ணீரை ஊற்றி, அதில் கட்டி வைத்த முடிச்சை போட்டு மூடி, அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து இறக்கி, ஆற வைத்து பருக வேண்டும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு