நேரம்: காலை 10 மணி, பிற்பகல் 3 மணி, இரவு – 7 மணி
நாட்கள்: குறைந்தபட்சம் 7 நாட்கள், அதிகபட்சம் 14 நாட்கள்.
தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 25 கிராம், தேன் – 50 கிராம்.
செய்முறை: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் தனித்தனியாக வறுக்க வேண்டும். வறுத்த பிறகு அவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு தூளாகும் வரை இடித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் ஒரு தேக்கரண்டி (Tea Spoon) அளவிற்கு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு தேன் சேர்த்து, குழைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முக்கடுகு சூரணம்.
இதிலிருந்து இரண்டு விரல்களால் கிள்ளி எடுத்தால் எவ்வளவு வருமோ, அதனை நாக்கில் வைத்துக் கொள்ள வேண்டும்.
காலை 10 மணி, பிற்பகல் 3 மணி, இரவு – 7 மணி என ஒரு நாளைக்கு மூன்று முறை உணவுக்குப் பிறகு நாக்கில் வைத்துக் கொள்ள வேண்டும்.