முளை வெந்தயம்

நேரம்: காலை வெறும் வயிற்றில்

நாட்கள்: குறைந்தபட்சம் 7 நாட்கள், அதிகபட்சம் 14 நாட்கள்.

தேவையான பொருட்கள்: வெந்தயம் – 1 கைப்பிடி, கைக்குட்டை அளவிற்கான தூய்மையான துணி – 1.

செய்முறை: வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெந்தயம் நன்கு ஊறியவுடன், ஓர் ஈரத் துணியில் முடிச்சு கட்டி வைத்துவிட வேண்டும். ஐந்து மணி நேரம் கழித்து முடிச்சை பிரித்துப் பார்த்தால், வெந்தயம் முளைத்திருக்கும். இதுவே முளை வெந்தயம்.

இதனை அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அம்மி அல்லது மிக்சியில் அரைத்து சாறுபோலவும்  பருகலாம். தேவைப்பட்டால் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கரைத்தும் உட்கொள்ளலாம்.

(வெறும் வயிறு என்றால், குளம்பி (காஃபி), தேநீர் (டீ), தண்ணீர் எதுவும் அருந்தாமல், மலம் கழித்த பிறகு என்று பொருள்.)


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு