நேரம்: காலை அல்லது வாய்ப்புள்ள நேரம்.
நாட்கள்: வாரத்திற்கு 1 நாள் அல்லது 2 நாட்கள்.
தேவையான பொருட்கள்: கீழே கொடுக்கப்பட்டுள்ள குளியல் பொருட்களில் மருத்துவர் பரிந்துரைக்கும் பொருள் – தேவைக்கேற்ப.
- கடலை மாவு,
- பாசிப்பயறு மாவு,
- நல்லெண்ணெய்,
- சோற்றுக்கற்றாழை
- வெந்தயம் (ஊறவைத்து அரைத்தது)
- குப்பைமேனி இலை (அரைத்தது)
- செம்பருத்திப் பூ அல்லது இலை (அரைத்தது)
- சோறு வடித்த கஞ்சி
- திருநீற்றுப் பச்சிலை (அரைத்தது)
- கரையான் புற்று மண்
- சந்தனத்தூள்
- மஞ்சள் (உரைத்தது)
செய்முறை: மருத்துவர் பரிந்துரைக்கும் பொருளை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து குளிக்க வேண்டும்.
முக்கியமாக, கண்ணிமைகள், உதடுகள், கைவிரல்களின் நகக்கண்கள், தொப்புள், ஆண்குறி அல்லது பெண்குறி, ஆசனவாய், மூட்டுகள், கால்விரல்களின் நகக்கண்கள் ஆகிய இடங்களில் நன்கு தேய்க்க வேண்டும்.
தேய்த்துவிட்டு, அதிகபட்சமாக 10 நிமிடங்களுக்கு ஊற வைத்தால் போதுமானது. கோடைக்காலம் அல்லது மழைக்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பச்சைத் தண்ணீர் அல்லது வெந்நீரில் குளிக்க வேண்டும்.
குறிப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட குளியல் பொருட்களை உடல்நல ஆலோசகர் பரிந்துரைத்தால், ஒவ்வொரு பொருளாக மாற்றி மாற்றி, ஒருநாள் விட்டு ஒருநாள் தேய்த்து குளிக்க வேண்டும்.