நேரம்: மாலை 6 மணி அளவில்.
நாட்கள்: குறைந்தபட்சம் 7 நாட்கள், அதிகபட்சம் 14 நாட்கள்
தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை – 1 கைப்பிடி, சின்ன வெங்காயம் – 3 அல்லது பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 3 பற்கள், தக்காளி – 1, மிளகுத் தூள் – தேவைக்கேற்ப, சீரகத்தூள் – 2 தேக்கரண்டி (Tea Spoon), சோம்பு – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (Pinch), உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு, அதில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும். கீரை வெந்தவுடன் இறக்கி, வடிகட்டி, முருங்கைச் சாற்றை மட்டும் பருகவும்.
குறிப்பு: முருங்கைக்கீரைக்குப் பதிலாக முருங்கைக்காய் ஒன்றை நறுக்கிப் போட்டும் இரசம் வைத்து மாலை நேரத்தில் பருகலாம்.