இணையவழி ஆலோசனை

யாவரும் நலம்.

உடல்நலம், மனநலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளுக்கு இணைய வழியில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறையைத் தொடங்கி இருக்கிறோம்.

கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே, ஆலோசனைகளைக் கேட்டு நிறைய தொலைப்பேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஏப்ரல், மே மாதங்களில் அவை அதிகரிக்கத் தொடங்கின.

கோரோனா அச்சத்தின் காரணமாக, சாதாரண தொந்தரவுகளுக்குக்கூட மருத்துவமனைகளுக்குச் செல்ல அச்சப்படும் பலர், அலைபேசியில் நம்மை அழைத்து மருத்துவம் கேட்கத் தொடங்கினார்கள். அனைவருக்கும் முடிந்தவரையில் உரிய நேரத்தில் பொறுமையாக ஆலோசனைகளை வழங்கினோம்.

இதற்கிடையில், ‘யாவரும் நலம்’, ‘நீர் மருத்துவம்’, ‘உறுப்பு நலன்’, ‘மனக்கடல்’ என நான்கு தலைப்புகளில் இணைய வழிக் கல்வியையும் தொடங்கிவிட்டதால், நம்முடைய நேரம் நம் கையில் இல்லை. இதனால் அனைத்து அழைப்புகளையும் ஏற்று, முறையாக பதிலளிக்க இயலவில்லை. இதனால் ஒருசிலருக்கு வருத்தம் கூட ஏற்பட்டிருந்தது.

எனவே உடல்நலம், மனநலம், வாழ்க்கை நலம் குறித்து ஆலோசனைகள் கேட்டு வரும் அனைத்து அழைப்புகளையும் முறைப்படுத்தி, அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாக இணைய வழி பதிவினைத் தொடங்கி இருக்கிறோம்.

உடல்நலம், மனநலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனை தேவைப்படுவோர், திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் அவரவருக்கு ஏற்ற நேரத்தினை அவர்களே தெரிவு செய்துகொள்ள முடியும். ஒவ்வொருவரும் பதிவு செய்திருக்கும் நேரத்தில் நாமே அழைத்துப் பேசி ஆலோசனைகளை வழங்குகிறோம்.

கைப்பேசி, கணிப்பொறி என எந்த கணினி கருவியின் மூலமும் சிக்கலில்லாமல், எளிமையாக பதிவு செய்துகொள்ளலாம்.

அனைத்து ஆலோசனைகளும் வீட்டு மருந்துகளைக் கொண்டு சரிசெய்து கொள்ளும் வழிமுறைகளைக் கொண்டவை. தேவைப்பட்டால், குறிப்புகளை வாட்சப் அல்லது குறுந்தகவல் மூலமாக அனுப்ப இயலும்.

இது இலவச சேவை அல்ல. கட்டணச் செயல்பாடு. ஆனால், நிலையான கட்டணம் என நிர்ணயிக்காமல், விருப்பக் கட்டணம் என்று வைத்திருக்கிறோம். எனவே, அவரவருக்கான கட்டணத்தை அவரவரே முடிவு செய்து, செலுத்திவிட்டு ஆலோசனைகளைப் பெறலாம்.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் இணைய வழியில் ஆலோசனை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சமீபத்தில் அறிவித்திருந்தது. தமிழ்நாடு அரசும் இணைய வழி உடல்நல ஆலோசனைகளைத் தொடங்கி இருக்கிறது. அந்த நெறிமுறைகளைப் பின்பற்றியே இந்த இணையவழி ஆலோசனையை முன்வைக்கிறோம்.

இணைய வழி ஆலோசனை தேவைப்படுவோர், இதே இணைய தளத்தின் https://kalanidhi.life/yaavarum-nalam-online-counseling/ என்ற சுட்டியை சொடுக்கவும்.

அனைவருக்கும் நன்றியும் அன்பும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு