பிரண்டை இரசம்

Pirandai

நேரம்: மாலை 6 மணி அளவில்.

நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.

தேவையான பொருட்கள்: முற்றிய பிரண்டைக் கொடி – 1 அடி நீளம், புளித்த மோர் அல்லது தயிர் – அரை குவளை, மிளகு – 1 தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, பூண்டு – 5 பற்கள், இஞ்சி – சிறிதளவு, சின்ன வெங்காயம் – 2, தக்காளி – பாதி, உப்பு – தேவைக்கேற்ப, தண்ணீர் – 250 மிலி.

செய்முறை: பிரண்டைக் கொடியை சுண்டு விரல் நீள அளவிற்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அவற்றை நீள வாக்கில் கிழித்து, புளித்த மோர் அல்லது தயிரில் ஊற வைக்கவும்.

2 அல்லது 3 மணி நேரம் கழித்து, பிரண்டை துண்டுகளை எடுத்து, தண்ணீரில் அலசிவிட்டு, மின்விசிறி காற்றில் காய வைக்க வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்து, பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி, காய்ந்த பிரண்டைத் துண்டுகளுடன் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் போட்டு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் 150 மிலி அளவுக்கு சுண்டியவுடன், இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு