பிரண்டைத் துவையல்

நேரம்: மதிய உணவுடன் அல்லது இரவு உணவுடன் சேர்த்துச் சாப்பிடுதல்.

நாட்கள்: 3 நாட்கள்.

தேவையான பொருட்கள்: பிரண்டை நார் நீக்கியது – 1 கைப்பிடி, உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி, புளி – சிறிதளவு, தேங்காய் துருவல் – 1 மேசைக்கரண்டி (Table Spoon), மிளகாய் வற்றல் – 2, கருவேப்பிலை – 1 கொத்து, நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: நல்லெண்ணெயில் உளுத்தம்பருப்பு, புளி, மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். இறுதியாக பிரண்டையையும் தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: அரைத்து வைத்த துவையலை மூன்று மணி நேரத்திற்கு திறந்து வைத்திருக்கவும். பிறகு உணவுடன் சேர்த்துச் சாப்பிடவும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு