நேரம்: காலை தூங்கி எழுந்தவுடன் அல்லது இரவு உறங்கச் செல்லும் முன் அல்லது இரு வேளையும்.
நாட்கள்: குறைந்தபட்சம் 14 நாட்கள், அதிகபட்சம் 48 நாட்கள்.
தேவையான பொருட்கள்: பொன்னாங்கண்ணி கீரை – 1 கைப்பிடி, கைக்குட்டை அளவிற்கு தூய்மையான பருத்தித் துணி – 1, கனமான நூல் – 1 சாண்.
செய்முறை: பொன்னாங்கண்ணிக் கீரையை லேசாக அரைத்து, நன்கு பிழிந்துவிட வேண்டும்.
கைக்குட்டையை குளிர்ந்த பச்சைத் தண்ணீரில் நனைத்து, பிழிந்துவிட வேண்டும்.
கைக்குட்டையில் அரைத்த பொன்னாங்கண்ணிக் கீரை சக்கையை வைத்து, நூலைக் கொண்டு முடிச்சு போட்டு கட்டிவிட வேண்டும்.
சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, கண்களை மூடி, இரண்டு கண்களின் மீதும் ஒற்றி ஒற்றி எடுக்க வேண்டும்.
இதை தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும்.