நேரம்: மதிய உணவுடன் அல்லது இரவு உணவுடன் சேர்த்துச் சாப்பிடுதல்.
நாட்கள்: 3 நாட்கள்.
தேவையான பொருட்கள்: புளித்தகீரை – 1 கைப்பிடி, சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2, நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Table Spoon), உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: புளித்தகீரை, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். நன்கு வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து, அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும். இதனை அரைத்துவைத்த புளித்தகீரை விழுதுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.