நேரம்: காலை உணவு நேரம்.
நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.
தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – கால் குவளை, பச்சை அரிசி – கால் குவளை, தேங்காய் துருவல் – கால் குவளை, வெந்தயம் – கால் தேக்கரண்டி, பூண்டு – 5 பற்கள், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: பச்சை அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
குக்கரில் கருப்பு உளுந்தை மட்டும் எடுத்து வாசம் வரும்வரை லேசாக வறுத்து கழுவி கொள்ளவும்.
அதில் பச்சை அரிசி, இரண்டரை பங்கு தண்ணீர், வெந்தயம், தட்டிய பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்கவும்.
மிதமான தீயில் 5-6 விசில் வரை குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
விசில் இறங்கியதும் நன்கு மசித்துவிட்டு பால் அல்லது தண்ணீர், உப்பு சேர்த்து கஞ்சி பதத்திற்கு கிளறவும்.
இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து மீண்டும் லேசாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: குக்கரில் சமைக்க விரும்பாதவர்கள், அடி கனமான பாத்திரத்தில் இதைச் செய்து கொள்ளலாம்.