நேரம்: மதிய உணவுடன் சேர்த்து சேர்த்துச் சாப்பிடுதல்.
நாட்கள்: அதிகபட்சமாக வாரத்திற்கு 2 நாட்கள்.
தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1, பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, தக்காளி – 1 நறுக்கியது, உப்பு – தேவைக்கேற்ப.
அறைப்பதற்கு: தேங்காய் துருவல் – 2 மேசை கரண்டி (Table Spoon), தண்ணீர் – சிறிதளவு.
தாளிக்க: தேங்காய் எண்ணெய் – 1 மேசை கரண்டி, கடுகு – அரை தேக்கரண்டி, உளுந்து – 1 தேக்கரண்டி, கருவேப்பிலை – 2 கொத்து, சீரகம் – அரை தேக்கரண்டி, பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது.
செய்முறை: வாழைப் பூவை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி மோர் கலந்த நீரில் ஊற வைக்கவும்.
தேங்காய் துருவலை சிறிது நீர் விட்டு அறைத்து கொள்ளவும்.
குக்கரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு வந்தவுடன் கடுகு, வெங்காயம், தக்காளி, பாசிப்பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, நறுக்கிய வாழைப்பூ ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பிறகு அறைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் ஒரு விசில் விடவும்.
விசில் இறங்கியதும் சுவை பார்த்து கொள்ளவும்.