வாழைத்தண்டு கூட்டு

நேரம்: மதிய உணவுடன் சேர்த்து சேர்த்துச் சாப்பிடுதல்.

நாட்கள்: அதிகபட்சமாக வாரத்திற்கு 2 நாட்கள்.

தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு நறுக்கிய துண்டுகள் – 1 கோப்பை, பாசிப் பருப்பு – 1 கைப்பிடி, சீரகம் – 1 தேக்கரண்டி (Tea Spoon), மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (Pinch), உப்பு- தேவைக்கேற்ப.

வறுத்து, அறைப்பதற்கு: தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி (Tea Spoon), வெள்ளை உளுந்து – 1 மேசை கரண்டி (Table Spoon), தேங்காய் துருவல் – 3 மேசைக் கரண்டி (Table Spoon), மிளகாய் வற்றல் – 3.

தாளிப்பதற்கு: தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி, கடுகு – அரை தேக்கரண்டி, வெள்ளை உளுந்து – 1 தேக்கரண்டி, கருவேப்பிலை – 2 கொத்து, கொத்தமல்லித் தழை – சிறிதளவு.

செய்முறை:

சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட வாழைத்தண்டை, நார் நீக்கிவிட்டு, மோர் கலந்த நீரில் ஊற வைக்கவும்.

பாசிப் பருப்பில் மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.

சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு வந்தவுடன் வெள்ளை உளுந்து, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற வைத்து அறைத்து கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்தவுடன் கடுகு, கருவேப்பிலை தாளித்து நறுக்கி வைத்த வாழைத்தண்டு துண்டுகளை வடிகட்டி சேர்த்து கொள்ளவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கி கொள்ளவும்.

வாழைத்தண்டு துண்டுகள் வெந்தவுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, அறைத்து வைத்த தேங்காய் கலவை ஆகியவற்றை கலந்து நன்றாக கொதிக்க விடவும்.

கொதி வந்தவுடன் இறக்கி வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு