நேரம்: இரவு உறங்கச் செல்லும் முன்.
நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.
தேவையான பொருட்கள்: வேப்பெண்ணெய் – 250 மிலி, சுக்கு – 2 அங்குலம், குப்பைமேனி, துளசி, கற்பூரவள்ளி – மூன்றும் சேர்த்து 1 கைப்பிடி.
செய்முறை: வேப்பெண்ணெயில் சுக்கை இடித்துப் போடவும். குப்பைமேனி, துளசி, கற்பூரவள்ளி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பாதியளவிற்கு சுண்டியவுடன் இறக்கி, துணியில் வடிகட்டி, ஒரு கண்ணாடி புட்டியில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இதுவே வேம்புத் தைலம்.
தேவைப்படும் போது அதிலிருந்து ஒரு தேக்கரண்டியில் எடுத்து, அதைமட்டும் சூடுபடுத்தி, வலியுள்ள இடங்களில் நன்கு, சூடுபறக்கத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.