Loganathan Lakshmi, Coimbatore
I was suffering by a rare physical problem for 45 years which no Allopathic doctor can even diagnose though I was a medical representative for 12 years and consultation was and medicine was free. This Naturopathy healer Shri. Kalanidhi sir diagnosed in the first sitting and completely cured it in one week only by changing my food habits. It seems he cures any major diseases by simple methods, no medicines, only by food habits, exposing the ailing parts to morning sun light, etc. I strongly recommend to take his advice and suggestions.
வனிதா சரவணன், துறையூர்
என் மகனுக்கு 13 வயது ஆகிறது. 8 வயது வரைக்கும் அவனுக்கு காய்ச்சல் வந்தால், ஆண்டிபயாடிக் மருந்துகளை கொடுத்துதான் சரிசெய்வோம். கலாநிதி அவர்களை சந்தித்த பிறகு கடந்த 5 ஆண்டுகளாக என் மகன், மகள், நான், என் கணவர் என யாரும் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்வதில்லை. குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால், அவரிடம் போன் செய்து கேட்கும்போது, அவர் பதில் சொல்வதிலேயே தொந்தரவுகள் சரியாகிவிடும். நாம் அவரிடம் சொல்லாத தொந்தரவுகளைக் கூட நாடி பார்ப்பதன் மூலம் கண்டுபிடித்துவிடுவார். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர். மேலும் படிக்க…
வழக்கறிஞர் மணி, சேலம்
எனக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் வந்தபோதெல்லாம் கலாநிதி அண்ணா, குருவாக இருந்து என்னை வழிநடத்தியிருக்கிறார்; தாயாக இருந்து அரவணைத்திருக்கிறார்; தகப்பனாக இருந்து சொல்லித் தந்திருக்கிறார்; நண்பனாக இருந்து ஆறுதலாக இருந்திருக்கிறார். வழக்கறிஞர் தொழிலில் நான் எவ்வளவோ பேர்களைச் சந்தித்திருக்கிறேன். என் அனுபவத்தில், கலாநிதியின் மானுட நேசம் என்பது தனிவகை. அதை அவருக்கு அருகிலிருந்து உணர்ந்தால்தான் புரியும். அவரைச் சந்திக்கும்போதே, மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அவரிடம் உள்ள பெருந்தன்மையே மற்ற மருத்துவ முறைகளை ஒருபோதும் குறை சொல்ல மாட்டார். மேலும் படிக்க…
தெ.சிவராமன், நாமக்கல்
ஒவ்வொரு மனிதரும் தம்மை ஏதேனும் ஒரு தருணத்தில் இயற்கை அன்னையின் அளவில்லா அன்பில், கருணையில், அழகில் ஒப்படைப்பு செய்துகொள்வது இயல்பே. அவ்வாறான உணர்தல் நிகழாதவர் ஆயினும், இறுதி நிலையில் தம்மை இயற்கையோடு பொருத்திக் கொள்வது இயற்கை. இதனை காலத்தே உணர்ந்து பிறர் உணர வழிகாட்டும் தோழர் கலாநிதி ஆவார். பிற உயிர்களின் தொந்தரவினை தன் உயிர்மெய்யால் உணர்ந்து வழிகாட்டும் தோழர் கலாநிதியின் நூல்கள் தற்கால அதிவேக வாழ்க்கைப் பயணத்திலிருந்து எனை ஈர்த்து, இளைப்பாறச் செய்த கல்ஆல் ஆகும். மேலும் படிக்க…
ரேவதி பிரபுராம், சேலம்
(தன் புகைப்படம் இடம்பெற வேண்டிய இடத்தில், சாய் பாபாவின் படம் இருக்க வேண்டும் என்பது ரேவதியின் விருப்பம்.)
எனக்கு கலாநிதி அவர்களை 4 ஆண்டுகளாகத் தெரியும். ஆரம்பத்தில் ஆங்கில மருத்துவ முறையில் இருந்து விடுபட சிரமமாக இருந்தது. வீட்டு மருத்துவமும் கடினமாக இருந்தது. இரண்டு மருத்துவ முறைகளுக்கும் இடையே தாவிக் கொண்டே இருந்தேன். மீண்டும் கலாநிதி அவர்களைச் சந்திந்த போது, அவரது எளிமையும் நிதானமும் சிறிதும் மாறவில்லை. இது அவர் மீதான மரியாதையைக் கூட்டியது. ஒருமுறை என் மூன்று மகள்களுக்கும் அடுத்தடுத்து காய்ச்சல் வந்தபோது, மனதளவில் சோர்ந்து போயிருந்தேன். அப்படியான நேரத்தில் கலாநிதியின் வார்த்தைகள் மாமருந்து. மேலும் படிக்க…
அனுபமாராணி, கொலம்பஸ், USA
அமெரிக்காவில் உடல்/மனம் நன்றாக உள்ளவரைதான் வாழ்க்கை இனிமையாக உள்ளது போல தோன்றும். எனக்கு படபடப்பு வருவது என்பது ஒரு மரண அனுபவம் போலத்தான் இருந்தது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பயம் இன்றி எதிர் கொண்டு மூல காரணத்திற்கு மருத்துவம் சொல்லி அதுவும் அலைபேசியில் என்பது சாதாரண விஷயம் இல்லை. இந்த பயணத்தின் மூலம் கலாநிதி அவர்கள் என் வாழ்க்கையை பல பரிணாமத்தில் மாற்றி அமைத்து கொடுத்துள்ளார். அதை இனி தொடர்ந்து செயல்படுத்தி நலனை தக்கவைத்து கொள்வது என் கடமை. மேலும் படிக்க…