நேரம்: காலையில் வெறும் வயிற்றில்
நாட்கள்: குறைந்தபட்சம் வாரத்திற்கு 1 நாள், அதிகபட்சம் வாரத்திற்கு 2 நாட்கள்.
தேவையான பொருட்கள்: குப்பைமேனி இலைகள் – 1 கைப்பிடி, குடிநீர் – 1 டம்ளர், உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை: குப்பைமேனி இலைகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு, அம்மியிலோ மிக்சியிலோ கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து அரைத்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கால் டம்ளர் சாறுடன் உப்பு சேர்த்து, கரைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
(வெறும் வயிறு என்றால், குளம்பி (காஃபி), தேநீர் (டீ), தண்ணீர் எதுவும் அருந்தாமல், மலம் கழித்த பிறகு என்று பொருள்.)
குறிப்பு: இதை குடித்தவுடன் பெரும்பாலும் வாந்தி வரும். கொஞ்ச நேரத்திற்கு தொண்டை கரகரப்பாக இருக்கும். அதுகுறித்து கவலைப்பட வேண்டாம். ஒரு சிலருக்கு அரிதாக வாந்தி வராது. வாந்தி வரவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்.